×

கல்லிடைக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலால் 10 பேர் பாதிப்பு பொதுமக்கள் அச்சம்

அம்பை பிப்.10:  கல்லிடைக்குறிச்சி பகுதிகளில்  10க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள தைக்கால் தெரு, மடவிளாகம் தெரு, கோட்டைத்தெரு, பட்டாரியர் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 10க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  சாதாரண காய்ச்சல் வந்தால் கூட குழந்தைகளும், பெரியவர்களும் அச்சத்தில் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகின்றனர். பொதுமக்களிடம் டெங்கு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்  பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக ஊர் முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிடவும், தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்திடவும், நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்,

Tags : public ,Kallidaikurichi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...