×

சங்கரன்கோவில் தொகுதியில் 7 மினி கிளினிக்

சங்கரன்கோவில். பிப்.10: சங்கரன்கோவில் தொகுதியில் 7 இடங்களில் மினி கிளினிக்குகளை அமைச்சர் ராஜலெட்சுமி  திறந்து வைத்தார். சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள மலையடிப்பட்டி, வையக்கவுண்டம்பட்டி  செவல்குளம், பனவடலிசத்திரம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி, சங்கரன்கோவில் கக்கன்நகர் ஆகிய 7 இடங்களில் மினி கிளினிக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மினி கிளினிக்குகள் தொடங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. சங்கரன்கோவில் கக்கன் நகரில் அமைச்சர் ராஜலட்சுமி மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் 15 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள பரிசு நலப்பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அருணா, நகராட்சி கமிஷனர் சாந்தி,  கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜரத்தினம்,   நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர்,   நகர்புற ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் மகாலட்சுமி, மருத்துவர் சரவணக்குமார், நெல்லை பேரங்காடி துணைத்தலைவர் வேல்ச்சாமி,  ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், வேல்முருகன், நகர செயலாளர் ஆறுமுகம், ஆதிதிராவிடர் வன்கொடுமை பாதுகாப்பு குழு உறுப்பினர் மாரியப்பன், இளைஞர் பாசறை நிவாஸ், தங்கம், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : clinics ,Sankarankoil ,constituency ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...