குடிமைப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி

தூத்துக்குடி: குடிமைப்பணி தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குடிமைப்பணி தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 26ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 6380089119, 9042260644 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தங்களது பெயர்களை முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>