×

தனியார் கல்வி நிறுவன உரிமையாளருக்கு 6 மாதம் சிறை ஆரணி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு ₹10 லட்சம் செக் மோசடி வழக்கில்

ஆரணி, பிப்.10: ₹10 லட்சம் செக் மோசடி வழக்கில் தனியார் கல்வி நிறுவன உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி ஆரணி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கேசவன் தெருவை சேர்ந்தவர் தினகரன்(47). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(48). ஆரணியில் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு தினகரனிடம் பிரபாகரன் ₹10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை திருப்பி தராமல் ₹10 லட்சத்திற்கான காசோலையை தினகரனிடம் கொடுத்துவிட்டு, கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால், பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததால் பிரபாகரன் கொடுத்த ₹10 லட்சத்திற்கான காசோலையை தினகரன் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போது, பிரபாகரன் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துள்ளது.இதையடுத்து தினகரன் கடந்த 2013ம் ஆண்டு பிரபாகரன் கொடுத்த காசோலையை வைத்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலட்சுமி, செக் மோசடி செய்த குற்றத்திற்காக தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் பிரபாகரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும், 3 மாதத்திற்குள் அந்த பணத்தை திருப்பி செலுத்த தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்

Tags : Owner ,institution ,Czech ,Arani Criminal Court ,
× RELATED விசாகப்பட்டினம் கல்வி நிறுவனத்தில்...