×

செங்கல்பட்டு/காஞ்சிபுரம் செய்திகள்

மாமல்லபுரம் அருகே மினி கிளினிக் திறப்பு
மாமல்லபுரம்: பொதுமக்கள் அனைவருக்கும் விரிவான மருத்துவ வசதி அளிக்கும் பொருட்டு, கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்க மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தில் நேற்று மினி கிளினிக் திறக்கப்பட்டது. செங்கல்பட்டு பொது சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், திருப்போரூர் வட்டார மருத்துவர் சுப்பிரமணியன், கேளம்பாக்கம் மருத்துவ அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி மினி கிளினிக்கை திறந்து வைத்தனர். இதில், திருப்போரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் குட்டி (எ) நந்தகுமார், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஆனூர் வீ.பக்தவச்சலம், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் பணிக்குழு நியமனம்
சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பணிகளை திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்ய காஞ்சி வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள ஆலந்தூர், பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள் அடங்கிய தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்படுள்ளது.

ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்
மாமல்லபுரம்:  மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவத்ைத முன்னிட்டு, கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாமல்லபுரத்தில், பிரசித்தி பெற்ற தலசயன பெருமாள் கோயில் உள்ளது. கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக இக்கோயில் திகழ்கிறது. இங்கு திருவிழாக் காலங்களில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை கோயில் செல்லும் வழியில் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப உற்சவமும், மறுநாள் மாசிமக தீர்த்தவாரி நடக்கும்.

இதையொட்டி, வரும் 26ந் தேதி மாசி மாத தெப்ப உற்சவம் நடைபெற்ற உள்ளது. இதை முன்னிட்டு உற்சவ கமிட்டி குழுவினர்  ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் விழா முன்னெற்பாடுகள் செய்வது, எத்தனை பக்தர்களை அனுமதிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வியாபாரிகள் மற்றும் தெப்ப உற்சவ கமிட்டி குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags : Chengalpattu ,Kanchipuram News ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது