×

சென்னங்காரணி கிராமத்தில் வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற கிராம சாலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சென்னங்காரணி ஊராட்சி உள்ளது. இங்கு விவசாயிகள், மாணவ - மாணவிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பத்தை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய சம்பந்தப்பட்ட வேலைக்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்காக இவர்களின் வசதிக்காக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சென்னங்காரணி கிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு மாநகர பஸ் இயக்கப்பட்டது. ஆனால் சாலை சேதமடைந்ததால் அந்த பஸ்சும் கடந்த வருடம் முதல் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், இந்த சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்திற்கும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கும் மனு கொடுத்தனர். தொடர்ந்து புதிதாக சாலை போடுவதற்காக கடந்த 4 மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை. எனவே விரைந்து சென்னங்காரணி கிராமத்திற்கு புதிதாக சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Village road ,village ,Chennankarani ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...