அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாட்ச்மேன் கைது

ஆவடி: அயப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்த வாட்ச்மேனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அயப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு திருவேற்காடு, சுந்தரசோழபுரம், ஏரிக்கரையை தெருவை சேர்ந்த உதயசூரியன்(59) வாட்ச்மேனான வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்பு வளாகத்தில் 8 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, உதயசூரியன் இரு சிறுமிகளையும் நைசாக பேசி அழைத்து சிறுகள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர்.

இந்த புகாரை போலீசார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சிறுமிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், காவலாளி உதயசூரியன் சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனனை நேற்று போக்சோவில் கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 31ம் தேதி கடைக்கு சென்றாள். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, தாய், மகளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தாய் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு சேர்ந்த சுபாஷ்(20) சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுபாஷ் பிடியிலிருந்து சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர், போலீசார் சுபாசை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுபாஷை கைது செய்தனர்.

Related Stories:

More
>