மகன் அடித்து கொலை வியாபாரி போலீசில் சரண்

திருத்தணி: திருத்தணி ரெட்டி குளம் தெருவை சேர்ந்தவர் பழனி(50). திருத்தணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவரது மகன் கோகுல்(21). இவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் போதைக்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற கோகுல் தந்தை பழனியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி மகன் கோகுலை அங்கிருந்த கற்களால் சரமாரி தாக்கி அடித்து கொைல செய்தார். இதனைத்தொடர்ந்து தானே நேரடியாக திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிந்து கோகுலின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More