×

போலி ஆவணம் தயாரித்து 2 கோடி நிலம் மோசடி: 4 பேர் கைது

சென்னை: மடிப்பாக்கத்தை சேர்ந்த நாகலிங்க மூர்த்தி (64), போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், மடிப்பாக்கத்தில் 1 கோடி மதிப்புள்ள 2400 சதுர அடி நிலம் வாங்கி, அதில் 2200 சதுர அடியில் வீடு கட்டி வசித்து வந்தேன். பிறகு, அலுவலக பணி மாறுதல் காரணமாக பெங்களூருவில் குடியேறினேன்.சமீபத்தில் மடிப்பாக்கம் வந்து பார்த்தபோது, எனது வீட்டை இடித்துவிட்டு, அங்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. விசாரணையில், வடக்கு மலையம்பாக்கம் வசந்தபுரி நகரை சேர்ந்த ராஜமன்னார் (42), போலி ஆவணம் தயாரித்து எனது இடத்தை அபகரித்து, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அதன்பேரில், ராஜமன்னாரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், அம்பத்தூர் மேற்கு பானு நகரை சேர்ந்த சசிகலாவுக்கு (60) சொந்தமான ₹1 கோடி மதிப்புள்ள 2400 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த எம்ஜிஆர் நகர் கே.வி.சம்பத் தெருவை சேர்ந்த காஜா மொய்தீன் (32), திருமுல்ைலவாயல் அன்னை தெரசா தெருவை சேர்ந்த மோகன் (46), எம்ஜிஆர் நகர் திருவிக தெருவை சேர்ந்த ராமையா (53) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...