×

சதுரகிரி செல்லும் வழியில் உள்ள ஓடை பாதை தற்காலிகமாக சீரமைப்பு

வத்திராயிருப்பு, பிப்.10: வத்திராயிருப்பு தாணிப்பாறை செல்லும் வழியில் உள்ள லிங்கம் கோயில் ஓடை பாதை  தினகரன் செய்தி எதிரொலியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. வத்திராயிருப்பு-தாணிப்பாறை செல்லும் வழியில் லிங்கம் கோயில் உள்ளது. கோயில் அருகே ஓடை உள்ளது. இந்த ஓடையில் தரைப்பாலம் இருந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு பெரியபாலமாக கட்டுவதற்கு தரைப்பாலம் உடைக்கப்பட்டது. ஆனால் பாலம் வேலை தொடங்காமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் இருந்தது.

பாலம் உடைக்கப்பட்டதால் மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக சென்றதால் இந்த ஓடை வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீர் குறைந்த பின்பு வாகனங்களில் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டனர். இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வௌியிடப்பட்டது. இதன் எதிரொலியாக லிங்கம் கோயில் ஓடை பாலத்தை இயந்திரம் மூலம் தற்காலிகமாக வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக சுந்தரமகாலிங்கம் கோயில் நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...