×

உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஆண்டிபட்டி, பிப். 10: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் தேர்தல் பரப்புரைக்கு தேனி மாவட்டத்திற்கு வந்த திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று காலை ஆண்டிபட்டிக்கு வந்த, உதயநிதி ஸ்டாலினுக்கு, பஸ்நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவராட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். ஆளுயர மாலை அணிவித்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாக ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு 14 கண்மாய்களும் 110 குளங்களும், 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்படும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும்.

ஆண்டிபட்டி பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு, 3 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.ஆண்டிபட்டி நகர் போக்குவரத்து நெரிசலில் தவித்து வரும் நிலையில் புறவழிச் சாலை அமைக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, தீர்மான குழு இணைச்செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம், புல்லட் மாயி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், இளைஞர், மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, சின்னமனூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், தேனி தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மனோகரன், மயில்வாகனன், சின்னமனூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அண்ணாத்துரை, சின்னமனூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுருளிராஜன், முன்னாள் சின்னமனூர் நகர பொருளாளர் தக்காளி அக்கீம், ஊத்துப்பட்டி கிளைச்செயலாளர் வேலு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெனார்த்தனன், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவின்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் பாஸ்கரன், உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அணைப்பட்டி முருகேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், செல்வம், உத்தமபாளையம் பேரூர் பொறுப்பாளர் சுல்தான் இப்ராகிம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பாளையம் மீரான், உத்தமபாளையம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், அபுதாஹீர் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கம்பத்தில் வடக்கு நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் துரைநெப்போலியன், தெற்கு நகர பொறுப்பாளர் சூர்யா செல்வக்குமார், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், பார்சி, சரவணன், டேனியல், ஜெகதீசன், சொக்கராஜா, குருகுமரன், குமரவேல், வெங்கட்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி ஈஸ்வரன், மாவட்ட வர்த்தகர் அணி ரவிச்சந்திரன், மாவட்ட மாணவர் அணி பால்பாண்டி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags : Udayanidhi Stalin ,speech ,election campaign ,textile park ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...