காரைக்குடியில் பரபரப்பு பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் புழு

காரைக்குடி, பிப்.10: காரைக்குடி அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு பேக்கரியில் கேக் ஆடர் செய்து வாங்கி உள்ளார். பிறந்நாள் விழா முடிந்து கேக் வெட்டி உறவினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். அதில் புழு இருப்பதாக கூறியதை தொடர்ந்து கேக் முழுவதையும் கொட்டி பாத்த போது அதில் ஏராளமான புழு இருந்தது. கடைக்காரர் அலட்சியமாக பதில் அளித்ததால் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    

சோலையம்மாள் கூறுகையில், கேக்கில் புழு இருப்பதாக கூறி கடைக்கு சென்று கேட்டபோது, பணியாளர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டனர். போனில் பேசிய கடை உரிமையாளர், குழந்தைகளுக்கு ஒன்றும் செய்யாது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் அல்லது பணம் வாங்கி கொள்ளுங்கள் என கூறினார். புழு வைத்த கேக் சாப்பிட்ட எங்கள் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டது என்றார்.    

உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் கூறுகையில், ‘‘புகார் குறித்து சம்மந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களின் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்சப் எண்ணுக்கு அனுப்பலாம்’’ என்றார்.

Related Stories:

>