×

பேக்கரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் காளையார்கோவிலில் விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

காளையார்கோவில், பிப்.10: தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் கோபால், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், துணை தலைவர் மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் என்பதை மாற்றி 200 நாள் வேலை வழங்கிடவும், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 600 ரூபாய் சம்பளம் வழங்கவும், 58 வயதை அடைந்த அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 வழங்கிடவும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை முற்றிலும் அகற்றி 400 சதுரடியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய பொருளாளர் விஜயராமன் நன்றியுரை வழங்கினார்.    

Tags : demonstration ,bakery ,Kaliningrad ,
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்