வீடு இடிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு நிதி

கமுதி, பிப்.10:  கமுதி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. கமுதி அருகே அபிராமம் நரியன் சுப்ராயபுரத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல். கடந்த மாதம் பெய்த தொடர் மழையில் இவரது வீடு இடிந்து விழுந்ததில் தங்கவேல் இறந்தார். இவரது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து கமுதி தாசில்தார் அலுவலகத்தில், தங்கவேல் மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் முத்துச்சாமி, செந்தில் குமார், மகள்கள் நாகலட்சுமி, குருந்தேவி ஆகியோருக்கு தலா ரூ.80 ஆயிரம் காசோலையாக, தாசில்தார் செண்பகலதா வழங்கினார்.

Related Stories:

>