பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகளுக்கு லேப்டாப்

பரமக்குடி, பிப்.10:  பரமக்குடியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கி, மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு அவரது சொந்த செலவில் இலவசமாக லேப்டாப்களை வழங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர்  முனியசாமி பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், பரமக்குடி நகர் அம்மா பேரவைச் செயலாளர் வடமலையான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர்கள் வினோத், சரவணன், பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>