தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

திருச்சி, பிப். 10: திருச்சி ஏர்போர்ட் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் நாகமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேஷியராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் இருந்த ஏடிஎம்மில் ரூ.30 ஆயிரம் எடுத்துக்கொண்டு வயல்லெஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 பேர் கோதண்டராமனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் ஒன்றரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>