தாரமங்கலத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

தாரமங்கலம், பிப்.10:சேலம் மேற்கு மாவட்டம், தாரமங்கலம் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர்  திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நெசவாளர் காலனியில்  நடந்தது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட நெசவாளரணி முத்துசாமி, வர்த்தகர் அணி ஜெயக்குமார், ஆறுமுகம், செல்வராஜ், பிரபு, ராஜரத்தினம், மாவட்ட பிரதிநிதி துரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆஞ்சி, வேடப்பன், தெசவிளக்கு சரவணன், சண்முகம், துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு பிரசாரத்திற்கு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்துகொள்வது மற்றும் திருசியில் நடைபெறும் மாநாட்டில் 2000 பேர் கலந்துகொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: