ஒன்பதாம்படி மயானத்தில் குப்பை கழிவுகள் அகற்றம்

பள்ளிபாளையம்,பிப்.10:  பள்ளிபாளையம் நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கோட்டை காட்டில் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஆவாரங்காடு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் ஒன்பதாம்படி மயானத்தில் கொட்டிவந்தனர். மேலும் குப்பைக்கு தீவைத்து எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்பட்டது. மயானத்தில் விஷ ஜந்துகள் பெருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நேற்று மயானத்தில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.

Related Stories:

>