×

நர்சுக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரருக்கு 28 ஆண்டு சிறை

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார்(28). போலீஸ்காரரான இவர், கடந்த 2020-21 ஆண்டுகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது அதே மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நர்ஸிடம் பாலியல் தொல்லையில் சதீஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நர்ஸ், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சதீஷ்குமாருக்கு 28 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு மூலம் ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags : Thiruvarur ,Satishkumar ,Kattur ,Tiruvarur Government Medical College Hospital ,
× RELATED விழுப்புரத்தில் கத்திமுனையில்...