புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்ந்தது

சேந்தமங்கலம், பிப்.10: நாமக்கல்  மாவட்டம் புதன்சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை  கூடுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்  ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.  நேற்று கூடிய சந்தைக்கு குறைந்த அளவிலான மாடுகளே விற்பனைக்கு  வந்திருந்தது. கேரளாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.  இதனால் சந்தையில் மாடுகள் விலை உயர்ந்தது. கறவை மாடு ₹45 ஆயிரத்துக்கும்,  இறைச்சி மாடு ₹20 ஆயிரத்துக்கும், கன்று குட்டி ₹12 ஆயிரத்துக்கும்  விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்று சந்தையில் ₹2 கோடிக்கு வர்த்தகம்  நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>