×

கிருஷ்ணகிரிக்கு இன்று வரும் முதல்வருக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் எம்பி.யுமான அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (10ம் தேதி) மதியம் 2 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலம் செல்கிறார். அவரை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கும் வகையில், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. எனவே, இந்நிகழ்ச்சியல் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று,தமிழக முதல்வரை வரவேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்