முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு

திருப்பூர்,பிப்.10:திருப்பூரில், முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நேற்று நடந்தது. கடந்த 2017-18, 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டில், அரசு, நகராட்சி மற்றும் மேல்நிலைபள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட, பணி நாடுனர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குதல் கலந்தாய்வு நேற்று மற்றும் இன்று (10ம்) தேதிகளில் நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாடங்களுக்கு, நேற்று காலை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கு, (10ம் தேதி) இன்று காலை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டு, அசல் கல்வி சான்றிதழ்கள், ஜாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>