குறைதீர் கூட்டத்தில் 308 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, பிப்.10: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கார்த்திகா தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 308 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, ஒருவார காலத்திற்குள் உரிய தீர்வு காணும்படி உத்தரவிட்டார்.

பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து, பணியின் போது காலமான 5 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் நிலையில் பணி ஆணைகளை, கலெக்டர் கார்த்திகா வழங்கினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், தனித்துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) நாராயணன், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>