×

தேயிலைக்கு உரிய விலை ேகட்டு கோத்தகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோத்தகிரி, பிப். 10: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படாததை கண்டித்து  நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரியில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படாததை கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் கோத்தகிரி அருகேயுள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை வகித்தார். செவணன கவுடர், ஜோகிகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று விட்டு, பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டதாகவும், மீதமுள்ள விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி கஷ்டப்பட்டு வருவதாகவும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் வழங்கப்படுவதில்லை, மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பல கோடி நிலுவைத்தொகை இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி, குன்னூர், கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றும். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை தூளில் கலப்படம் செய்வோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வரும் நாட்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும்.

பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும். எம்பி. எம்எல்ஏ. தேர்தல்களை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் ரமணன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாதன் நன்றி கூறினார்.

Tags : Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்