×

மசினகுடி வனப்பகுதியில் இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

ஊட்டி, பிப். 10: மசினகுடி அருகே வனப்பகுதிக்குள் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி அவற்றை உண்ண கூடிய விலங்கினங்கள் உயிரிழக்க கூடிய அபாயம் நீடிக்கிறது. ஊட்டியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் மசினகுடி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தை சுற்றி உள்ள வனங்களில் புலி, யானை சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் மசினகுடி - சிங்காரா சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 40 ஆண்டுக்கு முன் தடைசெய்யப்பட்ட கல் குவாரி ஒன்று உள்ளது.
இங்குள்ள கல் குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை அவ்வப்போது வன விலங்குகள் அருந்தி செல்கின்றன. மசினகுடி பகுதியில் உள்ள சில கோழி இறைச்சி கடைகாரர்கள் கழிவுகளை பிக்-அப்., ஜீப்கள் மூலம் கொண்டு சென்று தினந்ேதாறும் கல் குவாரியில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளும் அதிகளவு கொட்டப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் சிறுத்தை, பன்றி ேபான்ற வன விலங்குகள் இவற்றை உண்பதற்காக வருகின்றன. இதுமட்டுமின்றி மைனா,
ஈட்டர் பறவைகள் அதிகளவில் வருகின்றன. குறிப்பாக அரிய வகை பறவைகளான பிளாக் கைட், பிணந்தின்னி கழுகுகள் போன்றவை கோழி கழிவுகளை உட்கொள்கின்றன.

இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்ளும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழக்க கூடிய அபாயம் நீடிக்கிறது.  எனவே வனப்பகுதிகளில் கோழி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பிராய்லர் கோழிகள் வளர்ச்சியடைய அவற்றிற்கு ஊசிகள், மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால் அவை குறைந்த நாட்களில் வளர்ச்சியடைந்து விடுகிறது.

இவற்றை மனிதர்கள் சாப்பிட்டலே பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மசினகுடி அருகே வனப்பகுதியில் கொழி இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு வனப்பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இவற்றை வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் சாப்பிடுகின்றன. இதனால் அவற்றின் உடல்களில் பாதிப்பு ஏற்பட்டு இறக்க கூடிய சூழல் நிலவுகிறது. எனவே வனப்பகுதிகளில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க ேவண்டும், என்றார்.

Tags : death ,forest ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...