மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே நிழற்குடை அமைக்க கோரிக்கை

மஞ்சூர், பிப்.10: மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறன்றனர். மேலும், நோயாளிகளுடன் அவர்களது பாதுகாவலர்கள், பார்வையாளர்கள் என தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டி மருத்துவமனையின் முன்பாக வெட்ட வெளியில் சாலை யோரத்தில் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. காற்று, மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாததால் பெரும் அவதி ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி அரசு மருத்துவமனை அருகே நிழற்குடை அமைக்க கீழ்குந்தா பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.

Related Stories: