×

பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி புதிதாக கட்டித்தர கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, பிப். 10: பழைய தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய தலைவர் சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை. சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் பேசினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும். புயல், கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தி குடும்ப தலைவருக்கு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் யார் இறந்தாலும் உதவி தொகை வழங்க வேண்டும். பழைய தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் கார்த்திகேயன், தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ நகர செயலாளர் கலைச்செல்வன், விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள், இளைஞர் மன்ற நகர செயலாளர் சிவரஞ்சித் உள்ளிட்டோர் பேசினர். மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வி.தொ.சங்க ஒன்றிய தலைவர் ராஜாங்கம், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன் றிய செயலாளர் வீரமணி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள் ராஜன் ஆகியோர் பேசினர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜவகர், செயலாளர் மகாலிங்கம், நகர தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் வாசுதேவன் தலைமையில் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஒன்றியகுழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வி.தொ.சங்கத்தை சேர்ந்த ஒன்றிய தலைவர் மருதையன், செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் சமக மாவட்ட செயலாளர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,removal ,unions ,houses ,ones ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...