தாளவாடி வனப்பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சத்தியமங்கலம், பிப். 10:   தாளவாடி வனப்பகுதியில் மணல் கடத்திய டிராக்டரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரஹள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பனகள்ளி பிரிவு கெட்டவாடி மேற்கு வனப்பகுதியில் டிராக்டரில் மணல் கடத்துவதாக ஆசனூர் மாவட்ட வன அலுவலர் நாயுடுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் (பொ) சிவக்குமார் தலைமையில் அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் மணல் அள்ளி டிராக்டரில் லோடு ஏற்றும் பணியில் ஈடுபட்ட  கெட்டவாடி கிராமத்தை சேர்ந்த சென்னன் (49) என்பவரை பிடித்த வனத்துறையினர் மணல் ஏற்ற பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>