×

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,பிப்.10: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 63 மாதகால அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். கடந்த 2020 ஜனவரி முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை, பி எப், விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடுத்திட்டம் அமுல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மல்லி தியாகராஜன் தலைமை வகித்தார் .பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் மாணிக்கம், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாநில துணை தலைவர் துரை. மதிவாணன், பொதுச்செயலாளர் அப்பாதுரை ,கவுரவ தலைவர் சந்திரமோகன், போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் கஸ்தூரி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் . ஆர்ப்பாட்டம் முடிந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து முதல்வருக்கு கோரிக்கை மனுவினை நிர்வாகிகள் அளித்தனர் .

Tags : union ,cancellation ,State Transport Corporation ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்