தொழிற்சங்க கூட்டமைப்பு பேரவை பொதுத்தேர்தல்

தஞ்சை, பிப்.10: தென்னிந்திய தொழிலாளர்களின் நலன் சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேரவை பொதுத் தேர்தல் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக ஞான.பன்னீர்செல்வம் போட்டியின்றி தேர்வு பெற்றார். தேசிங்குராஜன் தலைவராகவும், ராஜா (எ) சிவானந்தம் துணை தலைவராகவும், ஜெர்லின் ஷீபா பொருளாளராகவும், தமிழ்ச்செல்வி துணை பொதுச் செயலாளராகவும், ஜெயசங்கர் செய்தி தொடர்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories:

>