கும்பகோணத்தில் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன செயற்குழு கூட்டம்

கும்பகோணம், பிப்.10: கும்பகோணத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட செயலாளர் குழந்தைநாதன் மற்றும் நிர்வாகி தர் பங்கேற்று பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி பழுது சேவையில் தொடரும் கடும் பின்னடைவு குறித்து பேசினார். தமிழ் மாநில ஒப்பந்த ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், ஒப்பந்த ஊழியர் சம்பளம் மீது தொடர்ந்திருக்கும் நீதிமன்ற வழக்கு குறித்து விளக்கி பேசினார். இதில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மற்றும் குடந்தை பகுதிகளில் பழுது சேவையில் நிலவும் தேக்கம் குறித்து வாடிக்கையாளர் சந்திப்பும், பைபர் இணைப்பில் ஊழியர்கள் அதிக தொகை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலர் பாலமுருகன் மாவட்ட செயலாளர் விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories:

>