×

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழா

திருவையாறு, பிப்.102 : திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர்கோயில் உள்ளது. இக்கோயிலில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக (சம்வத்ஸ்ராபிஷேக) விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர் முருகன் பெருமான் வழிபாடும், 8 மணிக்கு ஆட்கொண்டார். பெருமானுக்கு வடைமாலை சாத்தி அபிஷேகமும், 9 மணிக்கு மகாருத்ரஹோமம் தொடங்கி 10 மணிக்கு உச்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு யாகசாலையிலிருந்து பூர்ணாஹுதி முடிந்து கடம் புறப்பட்டு 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை மங்கள இசை, வீணை, வயலின் இசை நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வேதபாராயணம், தேவார திருமுறை பாராயணம், கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது. மேல ராஜவீதியில் சிறப்பு கலை நிகழ்ச்சியும், வானவேடிக்கையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Kumbabhishekam Anniversary ,Thiruvaiyaru Aiyarappar Temple ,
× RELATED சித்திரை திருவிழா கோலாகலம்...