×

உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அதிகாரிகள் மறுப்பு கலெக்டர் வீட்டை முற்றுகையிட சென்ற விவசாயிகளால் பரபரப்பு

கோவை, பிப்.10: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் தடையை மீறி கலெக்டர் பங்களாவை முற்றுகையிட சென்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். உள்ளூர் விவசாயிகளுக்கு முழு உரிமை என்ற அடிப்படையில் கோவையை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் உத்தரவை மீறி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதற்கு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன் கடை அமைக்ககூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தடையை மீறி நேற்று கடை அமைக்க முயன்ற விவசாயிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து வெளியூரை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 25 விவசாயிகள் கோவை ரேஸ்கோர்சில் உள்ள கலெக்டர் பங்களாவை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முற்றுகையை தடுத்து நிறுத்தி அவர்களை அப்புறப்படுத்தியதுடன், கலெக்டர் அலுவலகம் செல்லுமாறு கூறினர். இதை தொடந்து கலெக்டர் அலுவலகம் செனற விவசாயிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து வெளியூர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : collector ,house ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...