×

அமெரிக்கர்கள் இனி குடியுரிமை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்கர்கள் இனி குடியுரிமை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரி விதித்தல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். இதனிடையே அமெரிக்காவில் பிறந்தவர்கள் வாக்களிப்பதற்கான வயதை அடைந்த உடன் அந்நாட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் மூலம் தேர்தல்களின் போது, வாக்களித்தனர். ஆனால் இந்த முறையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி அவர் கொண்டு வந்துள்ள சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் இனி குடியுரிமையை நிரூபித்து, அதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல்களில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும் இது உலகம் முழுவதும் பேசுப் பொருளாக மாறி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வாக்களிக்க அனைவரும் குடியுரிமை சான்றிதழை காண்பிக்க வேண்டும், தபால் வாக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Tags : Americans ,President Donald Trump ,WASHINGTON ,U.S. ,PRESIDENT ,DONALD TRUMP ,US ,
× RELATED அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள்...