×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டை, பிப். 10: புதுகையில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க 1.000 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்து சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை மாத பிரதோஷ விழாவையொட்டி சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு லிங்க சிவபெருமானுக்கு தீபாராதனை நடந்தது. இதையடுத்து சுவாமி பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காசிக்கு வீசம் கூட என்றழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோயில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோயில், திருமலை ராயசமுத்திரத்தில் உள்ள கதிர் காமேஸ்வர காமேஸ்வரி அம்பாள் கோயில், விஜயநகர நாதபுரம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags : Shiva ,temples ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு