×

திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் இல்ல திருமண விழா மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்

புதுக்கோட்டை, பிப். 10: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அய்யனார்கோவில் திடலில் திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் நடந்தது. மணமக்கள் சங்கத்தமிழ்- முத்து தங்கம் ஆகியோரின் திருமணத்தை தலைமை ஏற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சுப.வீரபாண்டியன், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், தலைமை செய்தி தொடர்பு செயலாளர் அரசகுமார், எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் முத்துராஜா, துணை அமைப்பாளர் முத்துக்கருப்பன், வடக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சிவா மற்றும் திருமண வீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : MK Stalin ,Chandrasekaran ,house ,wedding ceremony ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...