இலுப்பூர், பிப். 10: இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை ஆர்டிஓ டெய்சிகுமார் ஆய்வு செய்தார். இலுப்பூர் திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு தமிழக அளவில் மிகவும் புகழ்மிக்கது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில் நாளை (11ம் தேதி) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரும் பகுதி, வாடிவாசல், மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் இடம், மாடுகள் சேகரிக்கும் இடம், அவசர வழி மற்றும் பார்வையாளர்கள் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை இலுப்பூர் ஆர்டிஓ டெய்சிகுமார் நேற்று ஆய்வு செய்தார். இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, தாசில்தார் பழனிசாமி, கால்நடைத்துறை துணை இயக்குநர் பாண்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.