கண்டிச்சங்காட்டில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

அறந்தாங்கி, பிப். 10: அறந்தாங்கி அருகே கண்டிச்சங்காட்டில் அனுமதி பெறாமல் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அறந்தாங்கி அடுத்த கண்டிச்சங்காடு கடைவீதியில் சிலர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நாகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நாகுடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று கண்டிச்சங்காடு கடைவீதியில் சோதனை நடத்தினர். இதில் கண்டிச்சங்காடு கடைவீதியில் அனுமதி பெறாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்த சாகுல் ஹமீது மற்றும் முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: