×

வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, பிப். 10: தமிழ்நாடு வனசீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் மூலம் 227 வனக்காவலர் பணியிடம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய 93 வனக்காவலர் பணியிடத்திற்கு தேர்வுகள் இணையதளம் மூலமாக மார்ச் மாதம் நடக்கவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனக்காவலர் பணியிடத்திற்கு 12ம் வகுப்பு பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது  தாவரவியல் பாட திட்டத்தை கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணியிடத்திற்கு இந்த கல்வி தகுதியுடன் தகுதி வாய்ந்த போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.forest.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தினை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான்பவன் மூன்றாவது தளத்தில் செயல்படும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். எனவே முன்னாள் படைவீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Forest Ranger ,
× RELATED வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வு