மது விற்ற 3 பேர் கைது

ஈரோடு, பிப். 10: ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி ரோடு எம்.ஜி.ஆர்.நகர் சமுதாய கூடம் அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக பெரியஅக்ரஹாரம் பூம்புகார் நகர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கென்னடி (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பங்களாபுதூர் போலீசார் ரோந்து சென்றபோது வாணிப்புத்தூர் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்த செல்வன் (54) என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதை கண்டனர்.

இதையடுத்து செல்வனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

இதேபோல் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றபோது சீனாபுரம் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக பெருந்துறை ரோடு கள்ளியம்புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>