×

கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் சுண்ணாம்பு கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்

பெரம்பலூர்,பிப்.10: பெரம்பலூர் அருகேயுள்ள கோவிந்தராஜபட்டினம் கிராமமக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கல் குவாரிக்கு தடை விதிக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வயலப்பாடி அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இதில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களால் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்காக கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சுண்ணாம்பு கல் குவாரியில் வெடி வைத்து பாறைகளை பிளந்து எடுக்கும் அதிர்வுகளால் குடியிருப்பு பகுதியில் உ ள்ள வீடுகள் விரிசல் அடைந்து பாதிக்கப்படுகின்றன. தூசு காற்று மாசடைவதால் இங்கு குடியிருக்கும் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்பட்டு காசநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.  வீடுகளில் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பயங்கர சப்தத்துடன் அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அதிக பாரம் ஏற்றி கனரக வாகனங்கள் செல்வதால் இங்குள்ள சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இறந் துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் எங்கள்பகுதியில் சுண்ணாம்பு கல் குவாரியை நடத்த அனுமதி அளிக்கவே கூடாது. அப்படி அனுமதி கொடுத்தால் பொதுமக்களை திரட்டி, சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Limestone quarry ,village ,Govindarajapattinam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...