×

மாத உதவித்தொகை ரூ.3000 வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

அரியலூர், பிப்.10: மாத ஊதவித்தொகை ரூ.3000 வழங்க கோரி அரியலூர் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில், மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவி தொகையாக ரூ.3000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் அமர்த்த வேண்டும் என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் பெண்கள் உட்பட 22 பேரை அரியலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags : Road blockade protest ,
× RELATED 140 ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி 4...