மக்கள் நீதிக்கட்சி முடிவு பாடாலூரில் ஜவுளிக்கடையில் பணம், துணிகள் திருட்டு

பாடாலூர், பிப்.10: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள ஒரு ஜவுளிகடையில் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூரை சேர்ந்தவர் தில்லைநாதன். இவர் பாடாலூர் கடை வீதி பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தில்லைநாதன் பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆள் வருவது தெரிந்த உடன் ஒடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>