35 பேர் கைது உறுதிமொழி ஏற்பு சட்டநாதபுரம் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

சீர்காழி, பிப். 10: சீர்காழி அருகே சட்டநாதபுரம் செங்கமேடு ரவுண்டானா அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே புறவழிச்சாலையையொட்டி பாருடன் கூடிய டாஸ்மாக் கடை திறக்க புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்தால் விபத்துகள் ஏற்படுவதோடு மாணவர்களுக்கு பல்வேறு வகையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் டாஸ்மாக் கடை திறந்தால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். பள்ளியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என விதிமுறைகள் இருந்தும் கடையை திறக்க முயற்சி நடந்து வருகிறது. டாஸ்மாக் கடை அமைவதை தடுக்க வேண்டுமென மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம், சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தனியார் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து டாஸ்மாக் கடை திறப்பதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>