×

கொள்ளிடம் ஒன்றிய அலுவலக குடோனில் 3 டன் இரும்பு கம்பிகள் திருட்டு

கொள்ளிடம், பிப். 10: கொள்ளிடம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான 3 டன் இரும்பு கம்பிகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள குடோனில் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டி கொடுப்பதற்கும் இரும்பு கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டு அந்தந்த கிராமத்துக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வழக்கம்போல் அதிகாரிகள், ஊழியர்கள் வந்தனர். அப்போது குடோன் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 3 டன் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருட்டுப்போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் பிடிஓ (கி.ஊ) ஜான்சன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,office godown ,Kollidam Union ,
× RELATED சங்கரன்கோவிலில் அன்பழகன் பிறந்தநாள் விழா