இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

சீர்காழி, பிப்.10: சீர்காழியில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. காரைக்கால் மாநில தலைவர் சனில்குமார், காரைக்கால் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் பக்தவச்சலன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளராக முருகவேல், சீர்காழி ஒன்றிய அமைப்பாளராக சேதுராமன், சீர்காழி ஒன்றியத் தலைவராக வசந்தன், சீர்காழி நகர தலைவராக சுப்பிரமணியன், சீர்காழி நகர ஒருங்கிணைப்பாளராக நாகமுத்து சீர்காழி நகர தலைவராக சந்துரு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

Related Stories:

>