விவசாயிகள் மகிழ்ச்சி மயானத்திற்கு இடம் கேட்டு வதியம் கிராம மக்கள் மனு

குளித்தலை, பிப்.10: குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் கிராம மக்கள் சார்பில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் ஒருவர் இறந்து விட்டால் அவர்களுடைய சடலத்தை காவிரி ஆற்றுக்கு எடுத்துச்சென்று எரித்தும், புதைத்து வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது பக்கத்தில் நில உரிமையாளர் மயானம் வைத்துள்ள இடம் அவர்களது இடம் என்று சொல்லி இடத்தை சர்வே செய்து அளவுகள் போட்டுவிட்டார். ஆகையால் எங்களுக்கு மயானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் ஊரில் எவரேனும் இறந்தால் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றால் வைக்க கூட இடமில்லை. இது சம்பந்தமாக ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்தாண்டு ஜனவரியில் மனு கொடுக்கப்பட்டு அந்த மனுவில் மயானத்திற்கு இடம் தேர்வு செய்து கட்டிடம் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீண்டும் 15.6.2020 அன்று நேரில் அதிகாரியிடத்தில் கொடுத்தும் அவ்விடத்தில் காலத்திற்கான இடம் தேர்வு கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி செய்யாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அவதிக்குள்ளாகி வருகிறோம். ஒரு மாத காலத்திற்குள் வதியம் ஊராட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கென மயானத்திற்கு இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories:

>