மினி கிளினிக் திறப்பு

ராசிபுரம், பிப்.9: ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரத்தில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சரோஜா திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து கருத்து காட்சியை பார்வையிட்டார். விழாவில், 10 பெண்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகங்கள் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள், 15 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மற்றும் 35 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்களை அமைச்சர் சரோஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories:

>