பிளாஸ்டிக் சாக்கு பைக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.9:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், ஜனநாயக மக்கள் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாக்கு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாரதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவனத் தலைவர் ஆறுமுகா கண்ணன் தலைமை வகித்தார். பிளாஸ்டிக் சாக்கு பைகளை தடைசெய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் முருகன், தங்கராஜ், சித்ரா கண்ணன், திலிப்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>