×

10 மாதங்களுக்கு பின் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி,பிப்.9 கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கியது. தமிழகம் முழுவதும் நேற்று அரசுபள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்த நிலையில், படிப்படியாக அனைத்து தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் அனைத்து போக்குவரத்து தளர்வு அளிக்கப்பட்டு செயல்பட்டன. மேலும் கல்லூரிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடந்த நிலையில், அனைத்து வகை கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனஹள்ளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ,மாணவிகளை ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்ப நிலையை பரிசோதித்து உள்ளே அனுமதித்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட இடைவெளிக்கு பின், மாணவ,மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். மேலும் நீண்ட நாட்கள் கழித்து சக மாணவ, மாணவிகள் சந்தித்து மகிழ்ந்தனர். அனைத்து மாணவ, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். அனைத்து மாணவ, மாணவிகள் கட்டாயம் கொரோனா நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

Tags : Schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...